நமது கல்லூரி காலம்
மகிழ்வு பொங்கி வழியும் காலமதில்
மதகு உடையும் போலந்த மனம் - அன்று
நிகழும் நிகழ்வும் கனவென கனகணவென
மறைந்தும் மறையாது வாழும் - இன்று .
எரியும் கடரதில் என்றும் திரியென
எண்ணம் ஒளியாகும் வண்ணம் - நம்மை
புரியும் புதிரதில் புதிய புவிகொண்டு
புனைந்தோம் ஓர்குடும்பப் பூங்கவிதை தம்மை .
இரவிப் பகல்கடலை இனிதாகச் சுமந்து மன
இருளை விரட்டி விடுகின்ற வேளை
புரவிஒரு தொகுப்புப் பூக்குவியல் கிடைத்துவிட
புலரும் கலையெனத் தோற்றுவிக்கும் இந்நாளை!
வசந்த காலமது வந்தகாலமதில் மறையவில்லையே இன்றும்
வாழ்ந்த நாட்களவை வந்துபோகுமோ என ஏக்கம்தோன்றுதே இன்னும்
கசிந்த காட்சிகளவை காணக்கிடைத்தபின்பு கண்கள் ஈரமாகிவிட்டது இன்று
கனியும் தேனுமென காலப்பாத்திரத்தில் கலந்த கோலமது பதிந்துவிட்டது!
---- கிருட்டிணகுமார்.